
அவளிலிருந்து அலையடிக்கும் நீலக்கடல்
மிதக்கும் ஊர்திக்குள்
மீனாகும் நான்
வெளி தேடி வாலால் கண்ணாடி உடைத்தேன்
கொட்டிய ரத்ததில்
வழுவழுப்பான உடல் சோர்ந்தேன்
கரையில் துடித்தவேளை
நிகழ்காலத்தில் அவள் கூச்சலிடுகிறாள்
நீலப் புடவையில் நுரை ததும்பதலில்
என் நம்பிக்கைகள் பளபளப்பக்கின்றன
ஒன்று கடலுக்குள் மூழ்குதல்
மற்றொன்று கரையில் விம்முதல்
இவற்றிற்கிடையே அல்லாடும் மனம்
கழியும் நாட்கள்
பொய்யாய் மிதந்த ஊர்தி
மீனாகிய நான்
கடலாகிய கரு நீலப்புடவை .
1 கருத்து:
அழகான கவிதை. தங்களை பதிவுலகில் காணக் கிடைத்தது மகிழ்ச்சி.
கருத்துரையிடுக